/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பென்ஷனருக்கு டிஜிட்டல் சான்று நாளை முதல் சிறப்பு முகாம்
/
பென்ஷனருக்கு டிஜிட்டல் சான்று நாளை முதல் சிறப்பு முகாம்
பென்ஷனருக்கு டிஜிட்டல் சான்று நாளை முதல் சிறப்பு முகாம்
பென்ஷனருக்கு டிஜிட்டல் சான்று நாளை முதல் சிறப்பு முகாம்
ADDED : அக் 30, 2024 06:24 PM
செங்கல்பட்டு:மத்திய, மாநில பென்ஷன்தாரர்கள் தபால்காரிடம் டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம், 1ம் தேதி துவங்குகிறது.
இது குறித்த்து செங்கல்பட்டு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சண்முகச்சாமி வெளியிட்ட செய்தி குறிப்பு:
மத்திய, மாநில அரசு ஒய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஒய்வூதியருக்கு, வரும் நவ., 1ம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்த படியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்குசேவை கட்டணமாக 70 ரூபாயை தபால்காரரிடம் செலுத்தவேண்டும். ஓய்வூதியரதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர்களிடம் பி.பி.ஓ., எண், ஆதார் எண், மொபைல் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஓரிரு நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க முடியும்.
இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையைபெற விரும்பும் ஓய்வூதிதாரர்கள் அருகிலுள்ள அஞ்சலகம், தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும், https;//ccc.cept.gov.in/serviceRequest.aspx என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வரும் நவ., 1ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

