/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
/
வரி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
ADDED : ஆக 19, 2025 12:17 AM
ஊனமாஞ்சேரி ஊனமாஞ்சேரியில், 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை, அமைச்சர்கள் அன்பரசன் மற்றும் மூர்த்தி ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு அரசின் மாநில வரி அலுவலகத்தில் பணிபுரிந்த 190 அலுவலர்கள், துணை மாநில வரி அலுவலர்களாக, அண்மையில் பதவி உயர்வு பெற்றனர். இவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, வண்டலுார் அடுத்த ஊனமாஞ் சேரி, காவல் உயர் பயிற்சியக வளாகத்தில், இந்த சிறப்பு முகாம் நேற்று துவக்கப்பட்டது.
அடுத்த மாதம் 30ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு பயிற்சி முகாமில், வணிக வரித்துறை சட்டங்கள், வரிச் சேவை மேம்பாட்டு திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு உட்பட, பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
தவிர, மன உறுதியை வலுப்படுத்தும் யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் வரி அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர், பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர்.
செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலெட்சுமி, வணிக வரி கமிஷனர் நாகராஜன், வணிக வரி மற்றும் பதிவு துறை செயலர் ஷில்பா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.