/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவர்களுக்காக சிறப்பு யாகம்
/
மாணவர்களுக்காக சிறப்பு யாகம்
ADDED : ஜன 05, 2026 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் யோக ஹயக்ரீவர் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும், மாணவ -- மாணவியர் தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற வேண்டி, யோக ஹயக்ரீவர் வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை யாகம் வளர்க்கப்பட்டு, யோக ஹயக்ரீவர் வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை, சிறப்பு ஹோமம் நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

