/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கோவில்களில் ஸ்ரீராமநவமி விழா
/
திருப்போரூர் கோவில்களில் ஸ்ரீராமநவமி விழா
ADDED : ஏப் 06, 2025 07:32 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் யோக ஆஞ்நேயர் கோவில் அமைந்துள்ளது. 21 ஆண்டுகள் முன் அமைக்கப்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழா ஒட்டி யோகா ஆஞ்சநேயர் தாயாருடன் சேர்ந்த ஸ்ரீராமர் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தனர்.
கோவில் இரு பக்கங்களில் உள்ள யோக அழகிரிவர், நரசிம்மர், நாராயணர் மற்றும் விநாயகர் ஆகிய சன்னிதிகள் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு யோக ஆஞ்சநேயர் சமேத ராமபிராணை வழிபாடு செய்தனர்.
திருப்போரூர் கிழக்கு மாட வீதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி வெங்கடேச பெருமாள் கோவிலிலும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் திருமால் எழுச்சி பாடலுடன் அர்ச்சனை நடந்தது.
கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள ஆஞ்நேயர் கோவில்களில் 10 நாள் உற்சவம் நடந்தது. 10 ம் நாள் உற்சவமான நேற்று ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
மானாமதி அடுத்த ஒரகடத்தில் கோதண்டராமர் கோவில், காரணை சீனிவாச பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. கோதண்டராமர் கோவிலில் கடந்த 2ம் தேதி விழா துவங்கி சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. நேற்று பிரதான விழாவான திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நெல்லிக்குப்பம் ஆதிகேசவ பெருமாள் கோவில், அகரம் கோதண்டராமர் கோவில்களிலும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.