/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செஸ் போட்டியில் எஸ்.ஆர்.எம்., இரண்டாம் முறை 'ஹாட்ரிக்'
/
செஸ் போட்டியில் எஸ்.ஆர்.எம்., இரண்டாம் முறை 'ஹாட்ரிக்'
செஸ் போட்டியில் எஸ்.ஆர்.எம்., இரண்டாம் முறை 'ஹாட்ரிக்'
செஸ் போட்டியில் எஸ்.ஆர்.எம்., இரண்டாம் முறை 'ஹாட்ரிக்'
ADDED : ஜன 30, 2024 04:30 AM

சென்னை : தென்மண்டல பல்கலை செஸ் போட்டியில் இரண்டாவது முறையாக, எஸ்.ஆர்.எம்., அணி, 'ஹாட்ரிக்' பட்டத்தை கைப்பற்றி, சாதனை படைத்துள்ளது.
பாரதிதாசன் பல்கலை சார்பில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையிலான செஸ் போட்டி, திருச்சியில் கடந்த 26ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது.
இதில், தென் மாநில அளவில் மொத்தம் 72 பல்கலை அணிகள் பங்கேற்று, எட்டு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடந்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், தமிழகத்தின் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
இந்த வெற்றியால், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக,'ஹாட்ரிக்' வெற்றியை எஸ்.ஆர்.எம்., அணியினர் கைப்பற்றி உள்ளனர்.
அண்ணா பல்கலை, வேலுார் வி.ஐ.டி., பல்கலை அணிகள் முறையே, அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.