/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில கபடி இறுதிப்போட்டி எஸ்.ஆர்.எம்., த்ரில் வெற்றி
/
மாநில கபடி இறுதிப்போட்டி எஸ்.ஆர்.எம்., த்ரில் வெற்றி
மாநில கபடி இறுதிப்போட்டி எஸ்.ஆர்.எம்., த்ரில் வெற்றி
மாநில கபடி இறுதிப்போட்டி எஸ்.ஆர்.எம்., த்ரில் வெற்றி
ADDED : ஆக 12, 2025 11:01 PM

சென்னை: மாநில அளவில் நடந்த கபடி போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
யு.ஜி.ஆர்., கபடி கிளப் மற்றும் வி.ஓ.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து, மாநில அளவில் ஆண்களுக்கான ஓபன் கபடி போட்டியை திண்டுக்கல், அணைப் பட்டியில் நடத்தின.
இதில் மாநிலத்தின் சிறந்த 20 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி போட்டியில் சென்னையின் எஸ்.ஆர்.எம்., அணி, கோவையின் கற்பகம் பல்கலை அணியை 32 - 30 என்ற புள்ளியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி, துாத்துக்குடியின் துரை சிங்கம் கிளப் அணியை எதிர்த்து மோதியது.
இதில் சிறப்பாக விளையாடிய எஸ்.ஆர்.எம்., அணி வீரர்கள், 22 - 21 என்ற புள்ளிக்கணக்கில், துரை சிங்கம் கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மூன்றாவது இடத்தை குளக்காரன்பட்டியின் பாரதி கிளப் அணி கைப்பற்றியது.