/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை நகராட்சிக்கு ஊழியர்கள் நியமனம்
/
மாமல்லை நகராட்சிக்கு ஊழியர்கள் நியமனம்
ADDED : டிச 03, 2025 06:20 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரம் நகராட்சிக்கு, படிப்படியாக அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மாமல்லபுரம், பிரபல சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. இப்பகுதி மேம்பாடு கருதி, உள்ளாட்சி நிர்வாகமான சிறப்பு நிலை பேரூராட்சியை, இரண்டாம் நிலை நகராட்சி நிர்வாகமாக, தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் தரம் உயர்த்தியது.
அதைத்தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் பதவியிடம் உருவாக்கி, தற்காலிக ஏற்பாடாக, பிற நகராட்சி கமிஷனர் இங்கும் கூடுதல் பொறுப்பு வகிக்க, நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
அதைத்தொடர்ந்து நகராட்சி இன்ஜினியர், மேலாளர், சுகாதார அலுவலர், கணக்காளர், களப்பணியாளர், மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஏற்படுத்தி, பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும், பல்வேறு பணியிடங்களில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

