/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
/
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 24, 2025 12:41 AM

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செல்லியம்மன் நகர், அண்ணா காலனியில் தேவேந்திரன் நகர், சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த இடத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
அதை சுற்றியுள்ள பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், இந்த கழிவுநீரில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பையை கொட்டி வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதில்லை. இதனால், அதிக அளவில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி,
சுற்றுவட்டார பகுதி மக்கள் துாக்கிமின்றி தவிக்கின்றனர்.
மேலும் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இப்பகுதியில் நீண்ட நாட்களாக, மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, அதில் குப்பை குவிந்துள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இப்பகுதிவாசிகள் தொற்று நோய் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் குப்பையை அகற்றி, 'பிளீச்சிங் பவுடர்' பரப்பி, சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

