/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உங்களுடன் ஸ்டாலின்' படூரில் முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' படூரில் முகாம்
ADDED : ஜூலை 29, 2025 11:30 PM

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில்,'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
படூர் ஊராட்சியில்,'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், ஊராட்சி தலைவர் தாரா தலைமையில் நேற்று நடந்தது.
திருப்போரூர் செயல் அலுவலர் மயில்வாகனன் வரவேற்றார்.
ஒன்றிய செயலர் மதியழகன், மாவட்ட து ணை அமைப்பாளர் முத்து முன்னிலை வகித்தனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன் பரசன், மாவட்ட கலெக்டர் சினேகா, கூடுதல் கலெக்டர் நாராயண சார்மா, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கினர்.
தொடர்ந்து, அமைச்சர் அன்பரசன் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.