/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உங்களுடன் ஸ்டாலின்' மறைமலை நகரில் முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' மறைமலை நகரில் முகாம்
ADDED : செப் 05, 2025 02:04 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில்,'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், அமைச்சர் அன்பரசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மறைமலை நகர் நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம், நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமில், வீட்டுமனை பட்டா மாற்றம், சாலை வசதி, முதல்வர் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
'இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகராட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.