/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஆக 02, 2025 11:31 PM

திருப்போரூர்,:நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.
பொதுமருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், மகப்பேறு மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதயமருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ மையங்களை அமைச்சர் பார்வையிட்டார்.தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து மாத்திரைகள் பெட்டகம், தொழிலாளர் நலவாரிய அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார். மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுவையும் பெற்றார்.
நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, திருப்போரூர் வி.சி.- எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.