/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கத்தில் ' உங்களுடன் ஸ்டாலின் ' முகாம்
/
மாம்பாக்கத்தில் ' உங்களுடன் ஸ்டாலின் ' முகாம்
ADDED : செப் 03, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி, தனியார் மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நடந்தது.
முகாமை திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தார்.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
இதில், அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்ட கமும், மற்றவர்களுக்கு மருந்து மாத்திரை பெட்டகமும் வழங்கப் பட்டது.