/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொலம்பாக்கம், கிளியா நகரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
பொலம்பாக்கம், கிளியா நகரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
பொலம்பாக்கம், கிளியா நகரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
பொலம்பாக்கம், கிளியா நகரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : ஜூலை 20, 2025 12:48 AM

சித்தாமூர்:பொலம்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, கிராம பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் தமிழகத்தில் கடந்த 15ம் தேதி துவங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் பொலம்பாக்கம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை,வேளாண்மை,கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் வாயிலாக 46 சேவைகள் வழங்கப்பட்டன.
வீட்டு மனைப்பட்டா, சிறப்பு வரன்முறை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, குடும்ப அட்டை என பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.
செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, முகாம்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கிளியா நகர் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் நடந்தது.
இதில் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க. - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று முகாமை துவங்கி வைத்தனர்.
கிளியா நகர் மற்றும் எல்.எண்டத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். முகாமில், 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.