/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பாக்கத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
செம்பாக்கத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : அக் 08, 2025 02:49 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, மின்வாரியத்துறை உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இதில், மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு, மின் இணைப்பு கோரி ஒருவர் மனு அளித்த போது, அதிகாரிகள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அங்கிருந்த தாசில்தார் சரவணனிடம் புகார் தெரிவித்தனர். அவர், 'முதலில் மக்கள் கொடுக்கும் அனைத்து மனுக்களையும் வாங்குங்கள். அதன் பிறகு ஆய்வு மேற்கொண்டு தகுதியுள்ளதா, இல்லையா என முடிவு செய்யலாம்' எனக் கூறியுள்ளார்.
அதன் பிறகு, அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.