/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்
ADDED : அக் 25, 2025 02:46 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சிறுநல்லுார் ஊராட்சியில்,'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நடந்தது.
சிறுநல்லுார் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், ஊராட்சி தலைவர் தெய்வசிகாமணி, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில், நேற்று நடந்தது.
இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை, பொதுமக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.
இந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல, சித்தாமூர் ஒன்றியம், அகரம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நேற்று நடந்தது.
இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட 15 துறைகள் வாயிலாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில், 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

