/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வயலில் மழைநீர் தேங்கி வீணாகும் வைக்கோல்
/
வயலில் மழைநீர் தேங்கி வீணாகும் வைக்கோல்
ADDED : அக் 05, 2025 01:58 AM

செய்யூர்:செய்யூர் பகுதியில் பரவலாக பெய்துவரும் மழையால் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் மழையில் நனைந்து வீணாகின.
செய்யூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும்.
இப்பகுதி 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. அதிகப்படியாக நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது சொர்ணவாரி பருவத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் முதிர்ந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக பெய்துவரும் மழையால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அறுவடை பணிகள் பாதிப்பு அடைந்து உள்ளன. மேலும், அறுவடை முடிந்து வயல்வெளியில் உள்ள வைக்கோல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அறுவடை செய்யப்படும் வைக்கோல் மழையில் நனையாமல் இருந்திருந்தால், கட்டு தலா, 100 முதல் 130 ரூபாய் என, விற்பனை செய்து இருப்போம்.
ஆனால் தற்போது பரவலாக பெய்துவரும் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி, வைக்கோல், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வைக்கோல் விற்பனை பாதிப்பு அடைந்து, இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.