/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டா வாங்கி 20 ஆண்டுகளாகியும் குடியேற முடியாமல் தவிப்பு
/
பட்டா வாங்கி 20 ஆண்டுகளாகியும் குடியேற முடியாமல் தவிப்பு
பட்டா வாங்கி 20 ஆண்டுகளாகியும் குடியேற முடியாமல் தவிப்பு
பட்டா வாங்கி 20 ஆண்டுகளாகியும் குடியேற முடியாமல் தவிப்பு
ADDED : செப் 07, 2025 12:45 AM

செய்யூர்:பட்டா வாங்கி 20 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் இல்லாததால், குடியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
செய்யூர் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான அம்மனுார், கீழச்சேரி, சுண்டிவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தில்7,௦௦௦த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பெரும்பாலான மக்கள் தினக்கூலி, விவசாயம் மற்றும் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குள்ள ஆதிதிராவிடர் குடும்பத்தினர், பல ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இடம் ஒதுக்கீடு செய்து வீட்டுமனை வழங்க வேண்டும் என, அவர்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக அம்மனுார் ஊராட்சிக்கு உட்பட்ட செய்யூர் - நெல்வாய்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டு, 2004ம் ஆண்டு அம்மனுார், கீழச்சேரி, சுண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் வீட்டுமனை இல்லாமல் வசித்து வந்த 140 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு, தலா 3.5 சென்ட் என, வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
பட்டா வழங்கப்பட்டு, 20 ஆண்டுகள் கடந்த நிலையில் சாலை, மின்சாரம், குடிநீர் என, எந்தவித அடிப்படை வசதியும் ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், இப்பகுதியில் குடியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
யாரும் குடியேறாமல் உள்ளதால், இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய தனி நபர்கள் முயற்சி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும் என, பட்டா பெற்றவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அம்மனுார் கிராமத்தில் பல ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா இல்லாமல் வசித்து வந்தோம். 20 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், குடியேற முடியவில்லை. பட்டா வழங்கியும் எந்தவித பயனும் இல்லை. - க.கமலம், கிராமவாசி, அம்மனுார்,