/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு சிற்பக் கல்லுாரியில் மாணவர் படைப்பு கண்காட்சி
/
அரசு சிற்பக் கல்லுாரியில் மாணவர் படைப்பு கண்காட்சி
அரசு சிற்பக் கல்லுாரியில் மாணவர் படைப்பு கண்காட்சி
அரசு சிற்பக் கல்லுாரியில் மாணவர் படைப்பு கண்காட்சி
ADDED : ஜூன் 26, 2025 01:58 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தமிழக கலை, பண்பாட்டுத் துறையின் கீழ், அரசு கட்டட கலை, சிற்பக்கலை கல்லுாரி இயங்குகிறது.
மரபு கட்டட, சிற்பக் கலைகள் குறித்து, நான்காண்டு பட்டப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.
மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கலை படைப்பாக்க திறனை மேம்படுத்தவும், ஆண்டுதோறும் பூம்புகார் நிறுவன கலைத்திறன் போட்டி நடத்தப்படும்.
தற்போது கலை, பண்பாட்டுத் துறை சார்பில், துவங்கி, நாளை வரை மாணவர் படைப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. கல்லுாரி முன்னாள் மாணவரும், பத்மஸ்ரீ விருது பெற்ற உலோக சிற்பக்கலை ஸ்தபதியுமான ராதாகிருஷ்ணன் கண்காட்சியை துவக்கி, படைப்புகள் குறித்து விளக்கம் கேட்டு வாழ்த்தினார்.
இதில், 103 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. முதல்வர் ராமன், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு கலை பிரிவிலும், முதல் மூன்று படைப்புகளை தேர்வு செய்து பரிசளிப்பதாக, முதல்வர் தெரிவித்து உள்ளார்.