ADDED : செப் 09, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
கூடுவாஞ்சேரி, செப். 10-–
கூடுவாஞ்சேரி அருகே, 21 வயது கல்லுாரி மாணவரை தாக்கி, தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் யோகரத்னா. இவர், தைலாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், பயின்று வருகிறார்.
இவர், நேற்று அதிகாலை, வல்லாஞ்சேரி சர்ச் சாலையில் தனியாக நடந்து சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், யோகரத்னாவை தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் தங்க செயினை அறுத்து, தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
