ADDED : ஏப் 06, 2025 07:40 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம், 20 என்பவர் மூன்றாம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த அவரது அறைக்கு நேற்று முன்தினம் இரவு 7 :00 மணியளவில் அவரது நண்பர் ஜெயந்த் வந்துள்ளார்.
நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்க வில்லை. அவர் கல்லுாரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜீவானந்தம் மின்விசிறியில் புடவையில் துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

