/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி
ADDED : ஜூலை 05, 2025 10:13 PM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொறையூர் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் மகன் ரிஷிகேஸ்வரன், 14. இவர், பள்ளி பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று, அவரது வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கிரிக்கெட் பந்து அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்துள்ளது. பந்தை எடுக்கச் சென்ற ரிஷிகேஸ்வரன், கிணற்றில் தவறி விழுந்து உள்ளார்.
மேல்மருவத்துார் போலீசார் மற்றும் அச்சிறுபாக்கம் தீயணைப்புத்துறையினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், ரிஷிகேஸ்வரன் உடலை மீட்டனர்.
மேல்மருவத்துார் போலீசார் மாணவன் உடலை மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.