/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக்கிலிருந்து விழுந்த மாணவர் லாரி சக்கரம் ஏறி பரிதாப பலி
/
பைக்கிலிருந்து விழுந்த மாணவர் லாரி சக்கரம் ஏறி பரிதாப பலி
பைக்கிலிருந்து விழுந்த மாணவர் லாரி சக்கரம் ஏறி பரிதாப பலி
பைக்கிலிருந்து விழுந்த மாணவர் லாரி சக்கரம் ஏறி பரிதாப பலி
ADDED : நவ 09, 2025 02:33 AM
பரங்கிமலை: இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த கல்லுாரி மாணவர் மீது, லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரங்கிமலை, பட்ரோடு, மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஆல்வின் ஜோயல், 18; கல்லுாரி மாணவர். அடையாறில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று அதிகாலை, 'யமஹா ஆர்-15' இருசக்கர வாகனத்தில், பரங்கிமலை- - பூந்தமல்லி சாலையில், நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவரின் வாகனத்தின் பின்புறம், கவுதம், 18, என்பவர் அமர்ந்து சென்றார்.
பட்ரோடு பகுதியில், அருகில் நண்பர் ஓட்டி வந்த வாகனத்தின் மீது, ஆல்வின் ஜோயல் சென்ற பைக்கின் கைப்பிடி பட்டதால், இருவரும் தடுமாறி விழுந்தனர்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி, ஆல்வின் ஜோயல் மீது ஏறி இறங்கி நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில், லாரியின் பின் சக்கரத்தில் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே ஆல்வின் ஜோயல் பலியானார். பின்னால், அமர்ந்து வந்த கவுதம், பலத்த காயங்களுடன், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், ஆல்வின் ஜோயல் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

