ADDED : பிப் 04, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
திருப்போரூர்: சென்னை, கானத்துார் தனியார் மரைன் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நோயல், 23, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரித்தேஷ் குமார், 21, கோவில்பட்டியைச் சேர்ந்த முகேஷ் பிரவீன், 19.
இவர்கள், கடந்த 1ம் தேதி கோவளம் அருகே குளித்த போது, அலையில் சிக்கி மாயமாகினர்.
சம்பவத்தன்று நோயல் உடலும், நேற்று முன்தினம் ரித்தேஷ் குமாரின் உடலும் கரை ஒதுங்கின. முகேஷ் பிரவீன் தேடி வந்த நிலையில், நேற்று காலை வடநெம்மேலி கடற்கரை பகுதியில் உடல் கரை ஒதுங்கியது.
கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
