/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 28, 2025 10:35 PM
செங்கல்பட்டு: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் சினேகா அறிக்கை:
இளம் சாதனையாளர்களுக்கான, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
2025 - 26ம் ஆண்டிற்கு, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம், வரும் 31ம் தேதி. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க, வரும் நவ., 15ம் தேதி இறுதி நாள்.
கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் தேசிய கல்வி உதவித்தொகை https;//scholarships.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

