/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி, கல்லுாரி விடுதியில் தங்கி படிக்க மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்
/
பள்ளி, கல்லுாரி விடுதியில் தங்கி படிக்க மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்
பள்ளி, கல்லுாரி விடுதியில் தங்கி படிக்க மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்
பள்ளி, கல்லுாரி விடுதியில் தங்கி படிக்க மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 10, 2025 10:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விடுதிகளில் தங்கி படிக்க பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கென, 14 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து விடுதி மாணவ - மாணவியருக்கும் மூன்று வேளை உணவு மற்றும் அரசு வழங்கும் இதர சலுகைகள் வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் - 2 பயிலும் மாணவ - மாணவியரின் கல்வித்திறனை மேம்படுத்த, 'நீட், ஜே.இ.இ.,' நுழைவுத் தேர்வுக்கான வினா வங்கி நுால்கள், சிறப்பு வழிகாட்டி நுால்கள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேர தகுதி
பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து, பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு, குறைந்தபட்சம் 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவ - மாணவியர் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளில் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், வரும் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதேபோன்று, கல்லுாரி விடுதிகளுக்கும், வரும் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஜாதி, மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.