/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாலை நேரத்தில் கூடுதல் பஸ் மாணவ - மாணவியர் கோரிக்கை
/
மாலை நேரத்தில் கூடுதல் பஸ் மாணவ - மாணவியர் கோரிக்கை
மாலை நேரத்தில் கூடுதல் பஸ் மாணவ - மாணவியர் கோரிக்கை
மாலை நேரத்தில் கூடுதல் பஸ் மாணவ - மாணவியர் கோரிக்கை
ADDED : ஆக 26, 2025 10:30 PM
திருப்போரூர்:திருப்போரூரில் இருந்து, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க, பள்ளி மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூரில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், திருப்போரூர் மற்றும் சுற்றியுள்ள ஆலத்துார், சிறுதாவூர், மடையத்துார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
காலை நேரத்தில், வெவ்வேறு நேரங்களில் அவரவர் பகுதிகளிலிருந்து பேருந்தில் பள்ளிக்கு வருகின்றனர்.
ஆனால், மாலை நேரத்தில் பள்ளிகளிலிருந்து ஒரே நேரத்தில் வெளிவரும் இவர்கள், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை பேருந்து நிறுத்தத்தில் குவிகின்றனர்.
வழக்கமாக வரும் பேருந்தில் இடம் பிடிக்க, முண்டியடித்து ஓடி ஏறுகின்றனர். அப்போது, கடுமையான தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.
அத்துடன், பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, உட்கார இடம் இல்லாமல், நின்று கொண்டே பயணிக்கின்றனர்.
பலர், அடுத்த பேருந்திற்காக காத்திருந்து, வீட்டிற்குச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மாலை நேரத்தில், கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ -- மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.