/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளாஸ்டிக் குப்பை அகற்றிய மாணவ - மாணவியர்
/
பிளாஸ்டிக் குப்பை அகற்றிய மாணவ - மாணவியர்
ADDED : ஜூலை 21, 2025 01:30 AM

மேல்மருவத்துார்:காட்டுக்கூடலுார் காப்புக்காடு பகுதி சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பையை பள்ளி மாணவ - மாணவியர் அகற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் --- வந்தவாசி நெடுஞ்சாலையில், காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை, ராமாபுரம் ஒட்டி காப்புக்காடு உள்ளது.
இங்கு, அச்சிறுப்பாக்கம் வனச்சரகர் விஜயகுமார் தலைமையில், நேற்றுமுன்தினம், தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் சாலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பையை அகற்றினர்.
மேலும், பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சோத்துப்பாக்கம் பஜார் வீதியில் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.