/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர்த்தேக்க தொட்டி பணிகள் கிடப்பில் போட்டதால் அவதி
/
நீர்த்தேக்க தொட்டி பணிகள் கிடப்பில் போட்டதால் அவதி
நீர்த்தேக்க தொட்டி பணிகள் கிடப்பில் போட்டதால் அவதி
நீர்த்தேக்க தொட்டி பணிகள் கிடப்பில் போட்டதால் அவதி
ADDED : மே 28, 2025 11:55 PM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர் பகுதியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பின், 2023 - 24ம் நிதியாண்டில், ஜே.சி.கே.நகர் பகுதியில், 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட, 1.48 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது.
இதில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் மட்டும் முடிந்துள்ளன.
ஆனால், 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோரிடம், சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி கமிஷனர், பொறியாளர் ஆகியோருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் துவக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன.
எனவே, பகுதிவாசிகள் நலன் கருதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை உடனே துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.