ADDED : ஜூன் 01, 2025 12:33 AM

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பல்வேறு விளையாட்டுகளுக்கு, கோடை கால சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. கடந்த மே 1ம் தேதி துவக்கப்பட்ட இந்த முகாம், நேற்று காலையில் நிறைவடைந்தது.
வில் வித்தை, தடகளம், கிரிக்கெட், கூடைப்பந்து, பூப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, தடகளம், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில், வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பல்கலை மைதானத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில், டேபிள் டென்னிஸ் பிரிவில் சிறந்த வீரராக ஷர்வேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
தவிர, தடகளத்தில் சுனிஷ்கா, இறகுப் பந்தில் ஹான்ஸ் டைவிக் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்று காலை நடந்த நிறைவு நாள் விழாவில், பயிற்சியில் பங்கேற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்திய வீரர் - வீராங்கனையருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.