/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிப்படை வசதி இல்லாத சூணாம்பேடு பஸ் நிலையம்
/
அடிப்படை வசதி இல்லாத சூணாம்பேடு பஸ் நிலையம்
ADDED : நவ 10, 2024 01:31 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை அரசூர், சூணாம்பேடு, புதுப்பட்டு, மணப்பாக்கம், வில்லிப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்து என, தினமும் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் எராளமானோர் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடந்தாண்டு 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால், பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சூணாம்பேடு பேருந்து நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.