/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சுங்கரப்பாதை பணி கடும் இழுபறி...கிடப்பில்! : ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
/
செங்கையில் சுங்கரப்பாதை பணி கடும் இழுபறி...கிடப்பில்! : ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
செங்கையில் சுங்கரப்பாதை பணி கடும் இழுபறி...கிடப்பில்! : ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
செங்கையில் சுங்கரப்பாதை பணி கடும் இழுபறி...கிடப்பில்! : ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
ADDED : பிப் 19, 2025 09:15 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்துள்ள நிலையில், அங்குள்ள கடவுபாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி, ரயில் துறையின் அனுமதி கிடைக்காததால், எட்டு ஆண்டுகளாக பணி கிடப்பில் உள்ளன. இதனால், கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு ---திருக்கழுக்குன்றம் சாலை வழித்தடத்தில், சென்னை- - விழுப்புரம் குறுக்கிடும் பகுதியில், ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இங்கு, அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகன ஓட்டிகள், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை கட்ட 2012 ம் ஆண்டு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பின், ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 2014 ம் ஆண்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்நிலையில், பழைய சாலையில் வாகனங்கள, பொதுமக்கள் சென்றுவர, சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ரயில்வே தண்டவாளம் பகுதியில், 2017 ம் ஆண்டு, சுரங்கப்பாதை பணி துவக்கப்பட்டு, 80 சதவீத பணிகளை, ரயில்வே நிர்வாகம் முடித்துள்ளது.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையினர் பணியினர் பணிகளை துவக்க, ரயில் நிர்வாகம் அனுமதி கிடைக்காததால், கிடப்பில் போட்டுள்ளனனர். தற்போது, சுரங்கப்பாதை உட்பகுதியில், கழிவுகளை கொட்டி துார்த்து வருகின்றனர்.
மேலமையூர், வல்லம், ஆலப்பாக்கம், அம்மணம்பாக்கம், பட்ராவாக்கம், குண்ணாவாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தண்டவாளத்தை ஆப்பத்தான நிலையில் கடந்து தினமும் சென்று வருகின்றனர்.
சுரங்கப்பாதை பணி முடியாததால், பள்ளி, கல்லுாரி செல்லும், மாணவ, மாணவியர், அத்தியாவசிபணிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில், நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே பொறியாளர்கள் கூட்டாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குபின், மக்கள் நடந்து செல்லும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலை துறை அனுமதி கேட்டு, கருத்து அனுப்பி வைத்தனர்.
சுங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால், சுங்கப்பாதை அருகாமையில், கிணறு அமைத்து, மின் மோட்டார் அமைத்து, தண்ணீர் வெளியேற்றி, கொளவாய் ஏரிக்கு விடப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சுரங்கபாதை அமைக்கும் பணிக்கு, ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுக்காமல், அலைக்கழித்து வருகின்றனர். எனவே, கிராமவாசிகள் நலன்கருதி, சுரங்கப்பாதை பணியை துவக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதிதர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பொறியாளர்கள் கூறியதாவது:
சுரங்கப்பாதை வழியாக, மக்கள் நடந்துசெல்லவும், இருசக்கர வாகனங்கள் சென்றுவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது. பணிகளை துவக்க, ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதிகோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன், அரசிடம் நிதி பெற்று பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில்வே மேம்பாலத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் கிராமவாசிகள் சென்று வருகின்றனர். மேம்பாலத்தில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. சுரங்கப்பாதை பணியை விரைந்து துவக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.எம். சுரேஷ்
சமூக ஆர்வலர்
மேலமையூர்

