/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம், பல்லாவரம் தாலுகாவில் பட்டா குடியிருப்பு பகுதியில் ஆய்வு பணி தீவிரம்
/
தாம்பரம், பல்லாவரம் தாலுகாவில் பட்டா குடியிருப்பு பகுதியில் ஆய்வு பணி தீவிரம்
தாம்பரம், பல்லாவரம் தாலுகாவில் பட்டா குடியிருப்பு பகுதியில் ஆய்வு பணி தீவிரம்
தாம்பரம், பல்லாவரம் தாலுகாவில் பட்டா குடியிருப்பு பகுதியில் ஆய்வு பணி தீவிரம்
ADDED : மே 21, 2025 09:59 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
இம்மனுக்கள் மீது விசாரணை செய்து, கள ஆய்வு நடத்தி, தகுதியானோருக்கு வருவாய்த் துறையினர் பட்டா வழங்கி வருகின்றனர். இதற்கிடையில், சென்னையிலிருந்து 32 கி.மீ., துாரத்திற்கு,'பெல்ட் ஏரியா'வாக தடை செய்யப்பட்ட பகுதியாக, 1962ல் அரசு உத்தரவிட்டது.
இந்த பெல்ட் ஏரியாவில், செங்கல்பட்டு தாலுகாவில் 15 கிராமங்கள், திருப்போரூர் தாலுகாவில் 29 கிராமங்கள்,
வண்டலுார் தாலுகாவில், 36 கிராமங்கள் மற்றும் தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் பல ஆண்டுகளாக வசித்து வருவோருக்கு, பட்டா வழங்க முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் 'பெல்ட் ஏரியா' தடையை நீக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசு கடந்த மார்ச் 3ம் தேதி உத்தரவிட்டது.
தாம்பரம், பல்லாவரம் மாநகராட்சி பகுதிகளில், 10 ஆண்டுகள் குடியிருப்பவர்களுக்கும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 5 ஆண்டுகள் குடியிருப்பவர்களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்படி தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஐந்து தாலுகாவில் மொத்தம் 15,412 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகா பகுதிகளில், 10 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ளவர்கள், அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு, பட்டா வழங்க முடியாத சூழல் உள்ளது.
இதனால், நகர் பகுதிகளில் ஐந்தாண்டுகள் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது போல் தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகா பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.