sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.37 கோடியில் நீஞ்சல் மடுவு தடுப்பு சுவர் திட்டம்...கிடப்பில்! இந்த ஆண்டும் புறநகரில் வெள்ளம் சூழும் அபாயம்

/

ரூ.37 கோடியில் நீஞ்சல் மடுவு தடுப்பு சுவர் திட்டம்...கிடப்பில்! இந்த ஆண்டும் புறநகரில் வெள்ளம் சூழும் அபாயம்

ரூ.37 கோடியில் நீஞ்சல் மடுவு தடுப்பு சுவர் திட்டம்...கிடப்பில்! இந்த ஆண்டும் புறநகரில் வெள்ளம் சூழும் அபாயம்

ரூ.37 கோடியில் நீஞ்சல் மடுவு தடுப்பு சுவர் திட்டம்...கிடப்பில்! இந்த ஆண்டும் புறநகரில் வெள்ளம் சூழும் அபாயம்


ADDED : நவ 18, 2024 03:51 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம், மஹாலட்சுமி நகர் நீஞ்சல் மடுவு பகுதியில், மழைக்கால வெள்ள பாதிப்புகளை தடுக்க, 37 கோடியில் தடுப்பு சுவர் அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டும், பருவமழையின் போது மஹாலட்சுமி நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் உள்ள நீஞ்சல் மடுவு கால்வாயில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் நீஞ்சல் மடுவு அணைக்கட்டு உள்ளது.

இந்த அணைக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி ஏரி உட்பட செங்கல்பட்டு மாவட்டத்தின் 60 ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் வருகிறது.

வடகிழக்கு பருவ மழையின் போது, இந்த அணையில் அதிக அளவில் தண்ணீர் தேங்குவது வழக்கம். தேங்கும் தண்ணீர், மற்றொரு கால்வாய் வழியாக, பொன்விளைந்தகளத்துார் ஏரிக்கு செல்லும்.

இதன் காரணமாக, நீஞ்சல் மடுவு கால்வாயை ஒட்டி, திம்மாவரம் ஊராட்சியில் மஹாலட்சுமி நகர் உட்பட பல்வேறு நகர்களில் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கும்.

தாழ்வான பகுதியாக இப்பகுதி இருப்பதால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்னை காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் இங்கு வசிப்போர் பரிதவித்து வருகின்றனர்.

பருவ மழைக்காலங்களில் மழை பெய்ய துவங்கியதும், மாவட்ட நிர்வாகம் படகு உள்ளிட்ட மீட்பு குழுவினருடன், இங்கு முகாமிடுவது வாடிக்கை.

கடந்த ஆண்டு பெய்த மழையில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மின் சாதன பொருட்கள், மெத்தைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தன. இவர்களுக்கு, அரசு வழங்கிய நிவாரண நிதி கூட சரியாக கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் வெள்ள பாதிப்பை தடுக்க, மஹாலட்சுமி நகரில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, சில ஆண்டுகளுக்கு முன், 37 கோடி ரூபாய் மதிப்பில், 800 மீட்டர் நீளம், 20 அடி உயரத்தில், கான்கிரிட் தடுப்பு சுவர் அமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதால், இந்த ஆண்டும் மஹாலட்சுமி நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த, அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீஞ்சல் மடுவு கால்வாய் பகுதியில், மஹாலட்சுமி நகரில் இருந்து வடகால் வரை, 5 கி.மீ., தொலைவுக்கு, கடந்த 2021ம் ஆண்டு துார் வாரப்பட்டது. தடுப்பு சுவர் அமைக்க கருத்துரு உருவாக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன், முறையாக டெண்டர் விடப்பட்டு, தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.

- பொதுப்பணித்துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.

நீஞ்சல் மடுவு கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கக்கோரி, கடந்த 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நீஞ்சல் மடுவு தடுப்பணையை பார்வையிட வந்த அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குனர் பொன்னையாவிடமும், தடுப்பு சுவர் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளோம்.

- நீலமேகம்,

ஊராட்சி தலைவர், திம்மாவரம்.

நீஞ்சல் மடுவு கால்வாய்


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னேரி ஏரி, பொது ப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 5,345 ஏக்கர் பரப்பளவும், 18 அடி ஆழமும் கொண்டது.இதன் உபரி நீர், நீஞ்சல் மடுவு கால்வாய் வழியாக, 25 கி.மீ., பயணித்து, சுற்றியுள்ள 60 ஏரிகளின் உபரிநீருடன், செங்கல்பட்டு அருகில் பாலாற்றில் கலக்கிறது.இதற்கிடையில், நீஞ்சல் மடுவு தடுப்பணை நிரம்பி, பொன்விளைந்தகளத்துார் ஏரிக்கு செல்லும் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் முன்னரே, மஹாலட்சுமி நகர் பகுதியில் வெள்ள நீர் புகுவதால், இரவு நேரங்களில் தடுப்பணையை மர்ம நபர்கள் திறந்து விடும் சம்பவங்களும் நடக்கின்றன.இதன் காரணமாக, பொன்விளைந்த களத்துார் ஏரி முழுமையாக நிரம்பாமல், அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.








      Dinamalar
      Follow us