நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:காயரம்பேடு ஊராட்சியிலுள்ள ஓமத்தம்மன், காசியம்மன் கோவிலில், நாளை ஊஞ்சல் உத்சவம் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, காயரம் பேடு ஊராட்சியில் புகழ்பெற்ற ஓமத்தம்மன், காசியம்மன் கோவில் உள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாளை இக்கோவிலில் ஓமத்தம்மன், காசியம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் நடைபெற உள்ளது.
அத்துடன், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது.
மேலும், பக்தர் களுக்கு அன்னதான மும் வழங்கப் படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஓமத்தம்மன், காசியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

