/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பிடே ஓபன் ரேட்டிங் செஸ்' தமிழக வீரர்கள் அசத்தல்
/
'பிடே ஓபன் ரேட்டிங் செஸ்' தமிழக வீரர்கள் அசத்தல்
ADDED : டிச 09, 2024 11:56 PM

சென்னை, இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழ்நாடு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் ஆதரவில், மவுண்ட் செஸ் அகாடமி, சீயோன் ஆல்வின் பள்ளி சார்பில், சர்வதேச அளவிலான பிடே ஓபன் ரேட்டிங் செஸ் போட்டிகள் நடந்தன.
போட்டிகள், சேலையூர் அடுத்த மெப்பேடில் உள்ள சீயோன் ஆல்வின் பள்ளி வளாகத்தில், நான்கு நாட்கள் நடந்தன. ஓபன் முறையில் நடந்த இப்போட்டியில், 8 வயது முதல் பல்வேறு வயது வரையிலான, 184 ரேட்டிங் வீரர்கள் உட்பட, மொத்தம் 407 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
தினமும் இரண்டு சுற்றுகள் வீதம், நான்கு நாட்களில் எட்டு சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. அனைத்து சுற்றுகள் முடிவில், முதல் மூன்று இடங்களையும் தமிழக வீரர்கள் பெற்றனர்.
இதில், தருண், 7.5 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றினார்; 30,000 ரூபாய் ரொக்க பரிசை வென்றார்.
ஏழு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்த ைஹதேவ், 25,000 ரொக்க பரிசை வென்றார். மூன்றாம் இடத்தை சரவணன் பிடித்தார்.
நான்காம் இடத்தை, மற்றொரு தமிழக வீரர் அஜேஷ், ஐந்தாம் இடத்தை தர்ஷன் சாஸ்தா ஆகியோர் கைப்பற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம், 3 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

