/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி குரோம்பேட்டையில் நெரிசல்
/
ஜி.எஸ்.டி., சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி குரோம்பேட்டையில் நெரிசல்
ஜி.எஸ்.டி., சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி குரோம்பேட்டையில் நெரிசல்
ஜி.எஸ்.டி., சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி குரோம்பேட்டையில் நெரிசல்
ADDED : ஆக 31, 2025 03:30 AM

குரோம்பேட்டை:ஆந்திராவில் இருந்து சிமென்ட் பவுடர் ஏற்றி வந்த டேங்கர் லாரி, குரோம்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து, ஜி.எஸ்.டி., சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், நேற்று மதியம் வரை, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சிமென்ட் கலவை மூலப்பொருளான, 60 டன் சிமென்ட் பவுடரை ஏற்றிக்கொண்டு, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டேங்கர் லாரி பல்லாவரத்தை அடுத்த கோவிலம்பாக்கத்திற்கு சென்றது.
மத்திய பிரதேச மாநிலம், குர்முச்சா மாவட்டத்தை சேர்ந்த சுனில் சாகு, 21, என்பவர் லாரியை ஓட்டினர். நள்ளிரவு 1:00 மணிக்கு, தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலை வழியாக லாரி சென்றது.
எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் சென்ற போது, ஓட்டுநர் தண்ணீர் குடிப்பதற்காக நிமிர்ந்தார். அப்போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, மையத்தடுப்பில் மோதி, சாலையின் நடுவில் கவிழ்ந்தது.
இதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், நள்ளிரவு முதல் மூன்று ராட்சத கிரேன்கள் மூலம் லாரியை துாக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 11:00 மணிக்கு, லாரி துாக்கி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, லாரியில் உள்ள சிமென்ட் பவுடரை, மற்றொரு லாரிக்கு மாற்றி எடுத்து செல்லப்பட்டது.
அதிக போக்குவரத்து கொண்ட ஜி.எஸ்.டி., சாலையின் நடுவில் டேங்கர் லாரி கவிழ்ந்ததால், தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் சாலையில், நேற்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று மதியம் வரை, இந்த போக்குவரத்து பாதிப்பு நீடித்தது. இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

