/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் 160 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயம்
/
விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் 160 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயம்
விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் 160 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயம்
விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் 160 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயம்
ADDED : ஏப் 25, 2025 10:01 PM
செங்கல்பட்டு:மத்திய அரசின் நிறுவனம் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த உளுந்து பயிர், மத்திய அரசின் நிறுவனம் வாயிலாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக, 160 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, உளுந்து ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 75 ரூபாய் வரையும், உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு, ஒரு கிலோ உளுந்து 74 ரூபாய் என கொள்முதல் செய்ய உள்ளது.
காஞ்சிபுரம் விற்பனைக் குழுவின் கீழ், மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 160 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய, அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கின் புத்தக நகல் ஆகிய விபரங்களுடன், விற்பனைக்கூட கண்காணிப்பாளரிடம் பதிவு செய்ய வேண்டும்.
உளுந்து விளைபொருளுக்கு உரிய தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

