/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேஜஸ் ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கம்
/
தேஜஸ் ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கம்
தேஜஸ் ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கம்
தேஜஸ் ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கம்
ADDED : ஆக 04, 2025 11:27 PM
சென்னை 'தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரயில், பழையபடி எழும்பூரில் இருந்து இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயக்கம், பயணியர் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, 734 கோடி ரூபாயில், 2023 பிப்., மாதம் முதல் மறுசீரமைப்பு பணி நடக்கிறது.
நடைமேடை விரிவாக்கம் மற்றும் நடைமேம்பாலம் பணி நடப்பதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து, தாம்பரம், கடற்கரையில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது, ஒரு பகுதி பணிகள் முடிந்துள்ளதால், மீண்டும் எழும்பூரில் இருந்து சில ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட தேஜஸ் ரயில், எழும்பூர் - மதுரை, மதுரை - எழும்பூர் வரை; எழும்பூர் - புதுச்சேரி, புதுச்சேரி - எழும்பூர் பயணியர் ரயில்கள், இன்று முதல் எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்கப்படுகின்றன.
ஒரு பகுதி ரத்து திண்டிவனம் ரயில்வே பணிமனையில் இன்று மதியம் 12:20 மணி முதல் மாலை 3:50 மணி வரை, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் - விழுப்புரம் இன்று காலை 9:45 மணி ரயில் ஒலக்கூர் வரை மட்டுமே இயக்கப்படும்
விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், ஒலக்கூரில் இருந்து இன்று இயக்கப்படும்.
மேற்கண்ட தகவல்களை, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.