தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாசி படர்ந்து சீரழியும் கோவில் குளம்

பாசி படர்ந்து சீரழியும் கோவில் குளம்

பாசி படர்ந்து சீரழியும் கோவில் குளம்


UPDATED : ஆக 31, 2026 10:05 PM

ADDED : ஆக 31, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 10:05 PM ADDED : ஆக 31, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூவத்துார்:ஈசியம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்கப்படாததால், பாசி படர்ந்து சீரழிந்து வருவதாக அப்பகுதி மக்கள் வே தனை தெரிவிக்கின்றனர்.

கூவத்துார் அடுத்த வடபட்டினம் ஊராட்சியில், 500க்கும் மே ற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. வடபட்டினத்தில் உள்ள ஈசியம்மன் கோவில் குளம், வடபட்டினம் ஏரிக்கு செல்லும் ஒரு முக்கிய நீரதாரமாக விளங்குகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பத்து ஆண்டுகளுக்கு முன் இக்குளம் துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டன. தற்போது பராமரிப்பின்றி குளம் முழுதும் ஆகாய தாமரைகள் முளைத்து, குளத்தின் கரைகள் பலமிழந்தும் காணப்படுகிறது. இதனால் குளத்தில் தேங்கும் மழைநீர் விவசாய நிலங்களுக்கு செல்லாமல், வீணாகி வருகிறது.

குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், திருவிழா போன்ற காலங்களில் குளத்து நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, கோவில் குளத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us