/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழை காலம் நெருங்கியும் பணிகள் முடியாததால் 'டென்ஷன்'
/
மழை காலம் நெருங்கியும் பணிகள் முடியாததால் 'டென்ஷன்'
மழை காலம் நெருங்கியும் பணிகள் முடியாததால் 'டென்ஷன்'
மழை காலம் நெருங்கியும் பணிகள் முடியாததால் 'டென்ஷன்'
ADDED : அக் 11, 2024 01:09 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் கால்வாய், சிறுபாலங்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ், கடந்த செப்., மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பின், தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதிகளில், மழைநீர் கால்வாய், பெரிய கால்வாய்கள், சிறுபாலங்கள் துார் வாரும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இதில், தாம்பரம் மாநகராட்சியில், 797.34 கி.மீ., மழைநீர் கால்வாயில், 785 கி,மீ., துார்வாரும் பணி முடிந்துள்ளது. பெரிய கால்வாய் 62.74 கி.மீ., துாரமும், சிறுபாலம் 6,930ல் துார் வாரும் பணி நடந்து வருகிறது.
தாம்பரம் பகுதியில், பாப்பன் கால்வாய், பம்மல் நாட்டு கால்வாய், புத்தேரி குளம் முதல் கீழ்கட்டளை ஏரி ஆகியவற்றில் துார்வாரும் பணி, நீர்வளத்துறை வாயிலாக நடந்து வருகிறது.
இதில், 75 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிந்து, மற்ற பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், 53.7 கி.மீ., மழைநீர் கால்வாய், 5.70 கி.மீ., பெரிய கால்வாய்கள், 289 சிறுபாலங்கள் துார்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் நகராட்சியில், 72.30 கி.மீ., மழைநீர் கால்வாய், 2.75 கி.மீ., பெரிய கால்வாய், 128 சிறுபாலங்கள் துார்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.
மறைமலை நகர் நகராட்சியில், 117 கி.மீ., மழைநீர் கால்வாய், 889 சிறுபாலங்கள் துார்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 106.40 கி.மீ., மழைநீர் கால்வாய், 2.85 கி.மீ., பெரிய கால்வாய், 342 சிறுபாலங்கள் துார்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளில், 115 கி.மீ., மழைநீர் கால்வாய், 294 சிறுபாலங்கள், 52 நீர் நிலைகள் துார்வாரி சீரமைக்கப்பட்டன. தற்போது நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.