/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விமரிசை
/
ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விமரிசை
ADDED : ஜூலை 02, 2025 02:11 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆனி திருமஞ்சன வழிபாடு, விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடராஜருக்கு, ஐந்து முறை திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதன்படி, முக்கிய திருமஞ்சனமான நேற்று, ஆனி திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.
கோவில் தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமையில், மாலை 6:00 மணியளவில், நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 7:00 மணிக்கு சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, மஹா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.