/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறவழிச்சாலை இணைப்பு சாலை படுமோசம்
/
செங்கை புறவழிச்சாலை இணைப்பு சாலை படுமோசம்
ADDED : பிப் 13, 2025 01:14 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலையில், தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில், இருபுறம் சர்வீஸ் சாலை உள்ளன. இச்சாலை வழியாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
தென்மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னையிலிருந்து தென்மாவட்டம் செல்லும், புறவழிச்சாலை அருகில் உள்ள, சர்வீஸ் சாலை ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, விபத்துக்களில் சிக்கி படுகாயமடைகின்றனர். சர்வீஸ் சாலை சீரமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, சமூக ஆர்வலர்கள் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி, சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

