/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்
/
சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்
ADDED : நவ 03, 2025 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி றுமயிலுார் கிராமத்தில் இருந்து கயப்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில், ஏரிக்கரை அருகே, மின்மோட்டார்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய, மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் சிமென்ட் கான்கிரீட் உதிர்ந்து, கடுமையாக சேதமடைந்து உள்ளது.
பலத்த காற்று வீசினால், மின்கம்பம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
- க.பாலகணேசன், சித்தாமூர்.

