/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உயர்த்தி அமைப்பு
/
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உயர்த்தி அமைப்பு
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உயர்த்தி அமைப்பு
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உயர்த்தி அமைப்பு
ADDED : செப் 15, 2025 11:48 PM

திருப்போரூர்;நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், மயிலை தாங்கல் ஏரிக்கரை குறுக்கே மிகவும் தாழ்வாக சென்ற மின்கம்பிகள், உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன.
திருப்போரூர் ஒன்றியம், மயிலை கிராமத்தில் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் குறுக்கே, மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றன.
இந்த வழியாக ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்பவர்கள் மற்றும் விவசாயிகள், உயிர் பயத்தில் சென்று வந்தனர்.
மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க கோரி, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம், கிராம மக்கள் வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரிக்கரையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பிகளை, புதிய மின்கம்பம் அமைத்து உயர்த்தி அமைத்துள்ளனர்.
இதனால், அப்பகுதி மக்கள் அச்சமின்றி ஏரிக்கரை வழியாக சென்று வருகின்றனர்.