/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு
/
கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு
ADDED : மார் 28, 2025 01:52 AM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விடையாற்றி உற்சவ நிறைவு விழாவில், பல்வேறு பழங்கள் அலங்காரத்தில், கந்த பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 15ம் தேதி திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைந்தது.
இதில், முக்கிய விழாவாக, கடந்த 9ம் தேதி தேர்த் திருவிழாவும், 12ம் தேதி தெப்ப திருவிழாவும், 15ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்து முடிந்தன.
திருக்கல்யாணம் உற்சவம் நிறைவடைந்த அன்றிலிருந்து 13 நாட்கள், விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், கந்த பெருமான் பல்வேறு பழங்கள் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, தங்க மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்தார்.