/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர்களுக்கு பட்டா கோரி போராடிய மலைவாழ் மக்கள் சங்கம்
/
இருளர்களுக்கு பட்டா கோரி போராடிய மலைவாழ் மக்கள் சங்கம்
இருளர்களுக்கு பட்டா கோரி போராடிய மலைவாழ் மக்கள் சங்கம்
இருளர்களுக்கு பட்டா கோரி போராடிய மலைவாழ் மக்கள் சங்கம்
ADDED : ஜூலை 04, 2025 01:42 AM

மதுராந்தகம்:இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நேற்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செய்யூர் தாலுகாவில் உள்ள பழங்குடி இருளர் மக்களுக்கு, நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
இதை கண்டித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், 200க்கும் மேற்பட்டோர் நேற்று, மதுராந்தகம் பஜார் வீதியில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.
பின், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் அமர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுராந்தகம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், இவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அதன் பின், பழங்குடி இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யாவிடம், மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் துறை அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.