/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை இல்லாமல் அவதி
/
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை இல்லாமல் அவதி
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை இல்லாமல் அவதி
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை இல்லாமல் அவதி
ADDED : மே 14, 2025 12:50 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார வள மைய அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் இருந்து தினமும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு மனு அளிக்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலக வளாகத்தில் 'ஜெராக்ஸ், பிரின்ட் அவுட்' போன்றவை எடுக்க கடைகள் இல்லாததால் முதியவர்கள், பெண்கள், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டத்தின் வாயிலாக, ஜெராக்ஸ் கடை மற்றும் டீ கடை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இதனால் பொதுமக்கள் நீண்ட துாரம் சென்று, ஜெராக்ஸ் எடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, மீண்டும் இந்த வளாகத்தில் ஜெராக்ஸ் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.