/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்து ஏற்படுத்தி பெண்ணிடம் 3 சவரன் செயின் பறித்தவர் கைது
/
விபத்து ஏற்படுத்தி பெண்ணிடம் 3 சவரன் செயின் பறித்தவர் கைது
விபத்து ஏற்படுத்தி பெண்ணிடம் 3 சவரன் செயின் பறித்தவர் கைது
விபத்து ஏற்படுத்தி பெண்ணிடம் 3 சவரன் செயின் பறித்தவர் கைது
ADDED : அக் 25, 2024 01:43 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பாண்டூர் பகுதியில் வசிப்பவர் பாலசுந்தரம், 40. இவரின் மனைவி காசியம்மாள், 36.
தம்பதி இருவரும், இருசக்கர வாகனத்தில் பாண்டூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி, நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், கடந்த திங்கட்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு பின்னால், பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், இவர்களது வாகனத்தின் மீது மோதியுள்ளார். அதன் பின், கீழே விழுந்த தம்பதிக்கு உதவி செய்வது போல் நடித்து, காசியம்மாள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
இது தொடர்பாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, பாலசுந்தரம் தகவல் தெரிவித்தார். அதன்படி, கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டு, தேடி வந்தனர்.
இந்நிலையில், நந்திவரம், அமுதம் காலனியில் வசித்துவரும் இளங்கோவன், 29, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.