/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விடாமல் குரைத்ததால் ஆத்திரம் நாயை குத்தி கொன்ற கொத்தனார்
/
விடாமல் குரைத்ததால் ஆத்திரம் நாயை குத்தி கொன்ற கொத்தனார்
விடாமல் குரைத்ததால் ஆத்திரம் நாயை குத்தி கொன்ற கொத்தனார்
விடாமல் குரைத்ததால் ஆத்திரம் நாயை குத்தி கொன்ற கொத்தனார்
ADDED : மார் 30, 2024 11:10 PM
மதுரவாயல்:மதுரவாயல் அடுத்த போரூர் கார்டன் பேஸ்- 1 பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன், 47. இவர், கட்டட உள் அலங்கார தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே புது கட்டட கட்டுமான பணி நடக்கிறது.
அங்கு, தொழிலாளர்கள் சிலர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், 49, என்பவர் கொத்தனாராக பணி புரிகிறார். சத்தியசீலன் வீட்டில் உள்ள நாய், அடிக்கடி கட்டட தொழிலாளர்களை பார்த்து குரைப்பது வாடிக்கை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கண்ணன் மது அருந்தி உள்ளார். பின், சிறுநீர் கழிக்க வெளியே சென்றார். அப்போது, சத்தியசீலன் வளர்க்கும் நாய், கேட் அருகே வந்து கண்ணனை பார்த்து குரைத்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்தவர் அருகில் கிடந்த கம்பியை எடுத்து நாயை குத்தி உள்ளார். வாயில் குத்து பட்ட நாய், சம்பவ இடத்திலேயே இறந்தது.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, நாயை கண்ணன் கொலை செய்தது தெரியவரவே, அவரை நையப்புடைத்து, மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், கண்ணனை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

