/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா
/
பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா
பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா
பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா
ADDED : ஏப் 28, 2025 04:09 AM

மேடவாக்கம்,:பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இங்கு அமைந்துள்ள காயத்ரி நகரில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டன் சிறுவர் பூங்கா, பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இது, கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பின்றி, புதர் மண்டி சீரழிந்துள்ளது. விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
மின் விளக்குகளும் இல்லை. இதனால், சிறுவர் மற்றும் நடைபயிற்சி செய்வோர், இப்பகுதியில் வேறு பூங்கா இன்மையால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஊராட்சி செயலர் கூறியதாவது:
ஊராட்சியில் உள்ள பூங்காக்களை சுற்றி மின் விளக்குகள், நடைபாதை அமைத்து பராமரிக்க, போதிய அளவு நிதி இல்லை. அதனால், எங்களால் பராமரிக்க இயலவில்லை.
பராமரிப்பு தொகை ஒதுக்கப்பட்டால், குறிப்பிட்ட பணிகளை முடித்து, விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.